18 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, ஏப்ரல் 26, மே 7, 13, 20 மற்றும் 25 என 6 கட்டத் தேர்தல் நிறைவடைந்தது. மொத்தமாக 486 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தைப் பொருத்தவரை மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாடு முழுவதும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக உள்ளன.
Republic Bharat-Matrize
Republic Bharat-Matrize கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி 69 முதல் 74 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 6 முதல் 11 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDTV-Jan Ki Baat
NDTV-Jan Ki Baat கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 68 முதல் 74 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 12 முதல் 16 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெல்லாது என்றும் NDTV-Jan Ki Baat கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
India News-D-Dynamics
India News-D-Dynamics கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி 69 தொகுதிகளிலும், INDIA கூட்டணி 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தொகுதிகள் ஏதும் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.