இந்தியா

"தற்போதுள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்" -  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

"தற்போதுள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்" -  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

Veeramani

தற்போதுள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்வது குறித்து சட்டப்பேரவைகளும் நாடாளுமன்றமும் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “கால மாற்றத்திற்கேற்பவும் மக்களின் தேவைக்கேற்பவும் சட்டத்திருத்தங்கள் அவசியமாக உள்ளது. அரசமைப்பு சாசனத்தின் நோக்கங்களுக்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்வதில் மக்கள் பிரதிநிதிகளின் அவைகளும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். நீதி பரிபாலனத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய மக்கள் பிரதிநிதிகளின் சபை, நீதிமன்றம், அதிகார வர்க்கம் ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.