இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான ஆசிஷ் தேஷ்முக், நீண்ட காலமாக விதர்பா தனிமாநில கோரிக்கை விடுத்து வருகிறார்.
பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சராசரியாக 4 கோடியே 90 லட்சம் மக்கள் வசிக்கும் வகையில் நாட்டை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அனைத்து பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளின் குரலுக்கும் சமமான மதிப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.