இந்தியா

கலையரங்கை சீரமைப்பதாக மோசடி - கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் மீது வழக்குப்பதிவு

கலையரங்கை சீரமைப்பதாக மோசடி - கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் மீது வழக்குப்பதிவு

webteam

நிதி மோசடி புகாரில் ஈடுபட்டதாக சென்னை கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. 

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் முன்னாள் தலைவருமான லீலா சாம்சன் கலையரங்கை சீரமைப்பதாகக் கூறி மத்திய கலாச்சார துறையிடம் 7 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. இவருடன் கலாஷேத்ரா நிர்வாகிகளான மூர்த்தி, ராமசந்திரன், சீனிவாசன், ரவி, நீலகண்டன் ஆகியோர் மீதும் கூட்டுசதி, நம்பிக்கை மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

கடந்த 2006- 2012 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ராவில் இயக்குநராக லீலா சாம்சன் இருந்தபோது, கலையரங்கை சீரமைப்பதில் மோசடி நடைபெற்றதாக 2016 ஆம் ஆண்டு ஆய்வு நடத்திய மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மத்திய கலாச்சாரத்துறை சிபிஐயிடம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.