இந்தியா

 “உடல்நிலை சரியில்லை ; மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்” - அருண்ஜெட்லி நினைவலைகள்

 “உடல்நிலை சரியில்லை ; மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்” - அருண்ஜெட்லி நினைவலைகள்

webteam

உடல்நிலை பாதிப்பு காரணமாக நிதியமைச்சர் பொறுப்பு வேண்டாம் என மறுத்தவர் அருண்ஜெட்லி. 

பஞ்சாப்பில் 1952 ஆம் ஆண்டு பிறந்த அருண் ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஏபிவிபி அமைப்பு மாணவர் தலைவராக இருந்தார். ஜெய்பிரகாஷ் நாராயணன் அமைத்த மாணவர் குழுவின் அமைப்பாளராகவும் பதவி வகித்துள்ளார். இந்திராகாந்தி அவசர நிலையை அமல்படுத்தியபோது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர் அருண்ஜெட்லி. 

சிறையில் இருந்து விடுதலையான பின் பாஜகவுக்கு முந்தைய அமைப்பான ஜனசங்கத்தில் சேர்ந்தார். 80 களில் பாஜக இளைஞரணி தலைவரானார். பின்னர். 1991 ல் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரானார். 1999 ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமரானபோது செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சரானார். 2000 ஆண்டில் மத்திய சட்ட அமைச்சர், கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஜெட்லி. 

2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நிதி பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்துறை, நீதி, மற்றும் சட்டத்துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர் ஜெட்லி. 2018ல் உத்திரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வானார் அருண்ஜெட்லி. 

வாராக்கடன் வசூலை கண்காணித்து பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொண்டார். நிதி அமைச்சராக இருந்தபோது நிதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் அருண்ஜெட்லி. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட துணிச்சலான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டவர். வங்கி, பான் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டவர். உடல்நிலை பாதிப்பு காரணமாக நிதியமைச்சர் பொறுப்பு வேண்டாம் என மறுத்தவர் அருண்ஜெட்லி. பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றிவர் அருண்ஜெட்லி. 

உடல்நிலை சரியில்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்ஜெட்லி இன்று காலமானார்.