இந்தியா

ஈவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா? - ஓ.பி ராவத் விளக்கம்

ஈவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா? - ஓ.பி ராவத் விளக்கம்

rajakannan

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ராவத், “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கான பாதுகாப்பு முறைகள் மிகவும் கடுமையானவை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்படும் பொழுதெல்லாம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு இருக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில்தான் ஈவிஎம் இயந்திரங்களை வெளியே எடுக்க வேண்டும். மாதிரி வாக்குப் பதிவும் நடத்திக் காட்டப்படுகிறது.

ஈவிஎம் இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு தயார் நிலையில் இருக்கும் போது, வாக்குச் சாவடியில் உள்ள ஏஜென்ட்டுகளை வாக்களிக்க வைத்து, அதனை எண்ணவும் செய்யப்படும். ஈவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்பதை உறுதி செய்ய இத்தனை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.