இந்தியா

'கள் குடிப்பது புற்றுநோயைக் கூட குணப்படுத்தும்' - தெலங்கானா அமைச்சர்

'கள் குடிப்பது புற்றுநோயைக் கூட குணப்படுத்தும்' - தெலங்கானா அமைச்சர்

webteam

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் குடிப்பது புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான நோய்களை குணப்படுத்தும் என தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்

சுதந்திர போராட்ட வீரர் சர்வாய் பாபன்னாவின் சிலை திறப்பு விழாவில் தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச கவுட் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர், பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் மருத்துவக் குணங்கள் நிறைந்தது என நிரூபிக்கப்பட்டுள்ள்ளது. இது 15 விதமான நோய்களை குணப்படுத்தும். தினமும் கள் குடித்தால் புற்றுநோய் கூட குணமாகும். முன்பெல்லாம் கள் என்பது ஏழைகளின் பாணம் என்பார்கள். இப்போதெல்லாம் பென்ஸ் காரில் சென்று கள் குடிக்கிறார்கள் என தெரிவித்தார்.

கடந்த மே மாதம் மதுபானக்கடைகள் மூடினாலும் அதற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் விற்பனைக்கு வழி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.

ஜூன் மாதம், பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர் விற்பனை குறித்தும் அமைச்சர் ஸ்ரீனிவாச கவுட் பேசி இருந்தார். பதநீர் உடலுக்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும், சிறுநீர பிரச்னைகளுக்கு பதநீர் குடிப்பது நல்லது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.