இந்தியா

தொழிலாளர்களின் பிஎஃப் சேமிப்பு பணத்திற்கான வட்டி 0.1% உயர்வு

தொழிலாளர்களின் பிஎஃப் சேமிப்பு பணத்திற்கான வட்டி 0.1% உயர்வு

webteam

பிஎஃப் சேமிப்பு பணத்திற்கான வட்டி 0.1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை கூட்டத்தில் பிஎஃப் சேமிப்பு பணத்திற்கான வட்டி 0.1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு முடிவு எடுக்கப்‌பட்டது. இதன்படி, வரும் மார்ச் மாதத்துடன் முடியும் 2018 - 19ம் நிதியாண்டில் பிஎஃப் வட்டி 8.65% ஆக இருக்கும். 

பிஎஃப் வட்டியை உயர்த்தும் அரசின் முடிவால் 6 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். பிஎஃப் அறக்கட்டளையின் முடிவுக்கு அடுத்தாக மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் தெரிவிக்கும். அதன் பின் மார்ச் இறுதியில் வட்டிப்பணம் தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். 

2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுகளில் பிஎஃப் பணத்திற்கு 8.75% வட்டி வழங்கப்பட்டது. 2015-16ல் இது 8.8% ஆக அதிகரித்தது‌. 2016-17ல் இது 8.65% ஆக குறைக்கப்பட்டு 2017-18ல் அது மேலும் குறைக்கப்பட்டு 8.55% ஆக்க‌ப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் வட்டி 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.