இந்தியா

ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு ஆணை

ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு ஆணை

rajakannan

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஹர்ஷவர்தன் கூறுகையில், “ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசு கொடுத்தது. 13 பேர் உயிரிழந்துள்ள வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார். 

ஆய்வு குறித்து மத்திய அரசின் அதிகாரிகள் கூறுகையில், “கோப்புகள் மூலமாக உடனடியாக ஆய்வு தொடங்கி விட்டது. யார் யார் எப்பொழுது ஆலைக்கு அனுமதி அளித்தார்கள், என்னென்ன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.