இந்தியா

ஜிஎஸ்டி பதிவு செய்ய வியாபாரிகளுக்கு ஆக.15 டெட்லைன்: மோடி

webteam

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வியாபாரிகள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி-யைப் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து வியாபாரிகளும் ஜிஎஸ்டி வரிக்குள் வருவதற்கு, மாநில தலைமைச் செயலாளர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதற்கான பணிகள் நிறைவு பெறுவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். மாநிலங்களின் நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் மோடி இதைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, ஜிஎஸ்டி வரி ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் மறைமுக வரிச்சுமைகளை குறைக்க இந்த வரிவிதிப்பு முறை நடைப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருவதற்காக பிரதமர் மோடி நேரடியாக அதன் செயலாக்கப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.