இந்தியா

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது

webteam

பண மோசடி வழக்கில் டெல்லியை சேர்ந்த சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மொயின் குரேஷி. வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் இவர், அரசியல்வாதிகளுடன் அதிக நெருக்கம் கொண்டவர். சர்ச்சைக்குரிய இவர் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை, பண மோசடி, ஹவாலா மற்றும் சட்டத்துக்கு புறம்பான பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர். இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்துகின்றனர்.