லான் மஸ்க், முகேஷ் அம்பானி எக்ஸ் தளம்
இந்தியா

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!

Prakash J

உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்டாா்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியா், பாரதி குழுமத்தின் ஒன்வெப் யூடெல்சாட் மற்றும் எஸ்இஎஸ்-ஜியோ இணைந்து நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆா்வம்காட்டி வருகின்றன. இதனால் ஏற்கெனவே நிலத்தில் டவா்கள் அமைத்து தொலைத்தொடா்பு சேவைகள் வழங்கிவரும் நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் நேரடி போட்டி ஏற்படவுள்ளது.

இதை கருத்தில்கொண்டு இந்த இரு வகையான நிறுவனங்களுக்கும் சமமான வணிக சந்தையை ஏற்படுத்தித் தர மத்திய தொலைத்தொடா்புத் துறை முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில், டிராய் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக இந்திய நிறுவனங்கள் (ஜியோ) சில குற்றஞ்சாட்டி உள்ளன.

இதற்கு, 'ஸ்டார் லிங்க்' தலைவர் எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார். “செயற்கைக்கோள் அகண்ட அலைவரிசைக்கு, ஏல நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு முகேஷ் அம்பானி அழுத்தம் அளித்துவருவது, இதுவரை இல்லாதது. உலக அளவில் செயற்கைக்கோள் வழி அகண்ட அலைவரிசை உரிமம் நிர்வாகரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுவதே நடைமுறை” என அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: வெடிகுண்டு மிரட்டல் | 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட 8 விமானங்கள்.. சோதனையில் வெளிவந்த தகவல்!

இதனால் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதுதொடா்பாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) ஜியோ நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதிலளித்த டிராய், ’செயற்கைக்கோள் வழியாக இணையச் சேவை வழங்குவதற்கான அகண்ட அலைவரிசையை, நிறுவனங்களுக்கு ஏலம் நடத்தி வழங்காமல், ஒதுக்கீடு முறையில் வழங்கலாம்’ என பரிந்துரை செய்திருந்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு, கடந்த வாரம் ஜியோ நிறுவனம் கடிதம் எழுதியது. அதில், ‘அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமற்ற நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்தான், ’இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

இந்நிலையில், ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும் ஒதுக்கீடு கூடாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுனில் மிட்டல், ”நகர்ப்புறங்களில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க விரும்பும் செயற்கைக்கோள் வழி இணைய நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்களைப் போலவே, உரிமக் கட்டணம் செலுத்தச் செய்ய வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான விதிகள் அனைத்தும் அவற்றுக்கும் பொருந்தும். அலைக்கற்றை உரிமத்தை, செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் விலை கொடுத்து வாங்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்கை பணம் செலுத்தி பெறச் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தடை உத்தரவு

'வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ்' உள்ளிட்ட சில செயற்கைக்கோள் வழி இணைய நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இதுபோன்ற சேவையை அளிக்கும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனமும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய்| உயிரிழந்ததாகப் பரவிய தகவல்.. மும்பை போலீஸ் சொல்லும் உண்மை என்ன?