எலான் மஸ்க் மோடி PT
இந்தியா

“நான் மோடியின் ரசிகன்” - இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு குறித்து எலான் மஸ்க் அதிரடி பேச்சு!

ஐநா தலமையகத்தில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதில் ஐநா தூதர்களும், அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

Jayashree A

நேற்று அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, 250 அடி நீள பேனரை வானில் பறக்கவிட்டு உற்சாக வரவேற்பளித்துள்ளனர் அங்குள்ள இந்திய வம்சாவளியினர்.

மோடியின் அமெரிக்க பயணத்தில், அமெரிக்காவில் உள்ள கல்வியாளர்கள், தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேச இருக்கிறார்.

நியூயார்க்கில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலரும் பிரதமருடன் உடன் இருந்தனர். ஐநா தலமையகத்தில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதில் ஐநா நாட்டு தூதர்களும், அதிகாரிகளும், பல பிரபலங்களும் இதில் பங்கேற்கயிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துனை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆன்டனி பிளிங்கன் ஆகியோரை மோடி சந்திக்க உள்ளார்.

”யோகா மூலம் மனித குலம் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெறுகிறது” - பிரதமர் நரேந்திர மோடி

“இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவை உலகறியச்செய்யும் முயற்சியில் இந்நிகழ்ச்சி முக்கியமான மைல் கல்” என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிராகாம்போஜ் தெரிவித்தார்.

”நான் மோடியின் ரசிகன்” - டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்

நியூயார்க்கில் பிரதமரை சந்தித்த அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க் செய்தியாளர்களிடையே பேசுகையில், ”மோடி உண்மையிலேயே இந்தியாவின் மேல் அக்கறை கொண்டுள்ளார். இந்தியாவில் பேட்டரி கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில், அதிக முதலீடுகளை செய்ய விரும்புகிறது, இதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன். அதேபோல் இந்தியாவிற்கு ஸ்டார் லிங்கை கொண்டு வரவும் ஆவலுடன் இருக்கிறேன். அடுத்த ஆண்டு இதற்காக இந்தியா வர இருக்கிறேன்” என்று கூறினார்.