இந்தியா

உ.பி: அபராதம் விதித்த இன்ஸ்பெக்டரை பழிவாங்க மின்ஊழியர் செய்த வேற லெவல் சம்பவம்

உ.பி: அபராதம் விதித்த இன்ஸ்பெக்டரை பழிவாங்க மின்ஊழியர் செய்த வேற லெவல் சம்பவம்

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசத்தில் அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரை பழி வாங்கும் வகையில், காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்ட திருட்டு மின் இணைப்பை லைன் மேன் ஒருவர் துண்டித்துள்ளார்.

பரேலி அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற பகவான் ஸ்வரூப் என்ற மின்வாரிய ஊழியருக்கு காவல் உதவி ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காவல் ஆய்வாளர் பணியாற்றும் ஹர்தாஸ்புர் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ஸ்வரூப் துண்டித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஸ்வரூப், “காவல் நிலையம் மின்சார மீட்டர் இல்லாமல் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. வேறுவிதமாகக் கூறினால் சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. மின்வாரிய ஊழியர்களிடம் கலந்தாலோசித்து விட்டு, அதன்பின்னரே மின்சாரத்தை துண்டித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக மின்இணைப்பு பெறப்பட்டதாகவும், அதற்கு உரிய அபராதத்தை செலுத்துமாறு மின்வாரியம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.