அருணாச்சலப்பிரதேசம் புதிய தலைமுறை
இந்தியா

அருணாச்சலப் பிரதேசம் | தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திகில் பயணம்!

அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்வதே தேர்தல் அலுவலர்களுக்கு சவாலாக இருந்துள்ளது.

PT WEB

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், 102 தொகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்வதே தேர்தல் அலுவலர்களுக்கு சவாலாக இருந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் | தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திகில் பயணம்!

மலையேற்ற வீரர்கள் ஏதோ சாதனை நிகழ்த்த முயற்சிப்பது போல் உள்ளது இந்த காட்சி... ஆனால், இவர்கள் மலையேற்ற வீரர்களும் அல்ல.. இது வரலாறு படைக்கும் சாதனையும் அல்ல.. அருணாச்சல பிரதேச தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வந்த சோதனை..

செங்குத்தாக காணப்படும் மலைக் குன்றுகளில் தேர்தல் அலுவலர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தால், வாக்குச்சாவடிக்கு செல்லத்தான் இத்தனை சவால்களை கடக்க வேண்டியுள்ளது.

அருணாச்சல பிரதேசம் சியாங் மாவட்டத்தில் உள்ள RUMGONG கிராமத்தில் வாக்குச்சாவடி அமைப்பதற்காக, மின்னணு இயந்திரங்கள் உட்பட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்துகொண்டு, மிகவும் சவாலான பாதையில் தேர்தல் அலுவலர்கள் பயணம் செய்தனர்.

தேர்தலுக்கு தேர்தல் இதே நிலை காணப்பட்டாலும் அந்த கிராமங்களின் நிலை மாறியதாக தெரியவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் இன்னும் சாலை உட்பட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பதற்கு அருணாச்சல பிரதேச RUMGONG கிராமம் சான்றாக உள்ளது.