இந்தியா

ராம்விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

ராம்விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

Veeramani

பீகார் லோக் ஜனசக்தி கட்சியின் மறைந்த தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின்  மகன் சிராக் பாஸ்வான் மற்றும் அவரின் சகோதரரான மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ஆகியோர் தலைமையில் இப்போது கட்சியில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருவதால் லோக் ஜனசக்தி கட்சியின் ‘பங்களா’ சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிராக் பாஸ்வானுக்கும் அவரது சித்தப்பா பசுபதி குமார் ராஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே தேர்தல் ஆணையம், இனிவரும் தேர்தல்களில் இரு பிரிவினரும் கட்சி பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்றும், எல்ஜேபியின் பங்களாசின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வரும் திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு முன்னதாக முன்னுரிமை வரிசையில் மூன்று இலவச சின்னங்களை தேர்வு செய்யுமாறு இரு பிரிவினரையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.