இந்தியா

சைக்கிளைப் பறிகொடுத்த முலாயம் சிங்

webteam

சமாஜ்வாதிக் கட்சியின் சைக்கிள் சின்னத்தை முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலையடுத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோரி முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் தனித்தனியாக முறையிட்டனர். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சமாஜ்வாதிக் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னத்தை அவருக்கு ஒதுக்கியுள்ளது. இது முலாயம் சிங்குக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.