பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தனது மகனுடன் வயதான விவசாயி ஒருவர் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். விவசாயி வேஷ்டி அணிந்து வந்ததால், வணிக வளாகத்தின் பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அப்போது அந்த விவசாயி, தனது மகனுடன் படம் பார்க்க வந்ததாகவும், மிக தொலைவில் இருந்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு வணிக வளாகத்தின் பாதுகாவலர்கள் PANT அணிந்து வந்தால் மட்டும் உள்ளே அனுமதிப்பதாக கூறினர்.
இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் அந்த விவசாயிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பலரும் வேஷ்டி அணிந்து வணிக வளாகத்திற்குள் சென்றனர். இதனையடுத்து பாதுகாவலர்கள் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளனர்.