இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் AK-47 துப்பாக்கிகள் பறிமுதல்

ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் AK-47 துப்பாக்கிகள் பறிமுதல்

webteam

ஜார்க்கண்ட்  மாநில முதல்வரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் AK-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்கச்சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக  ராஞ்சியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரேம் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 11 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து இரண்டு AK-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் புதிய திருப்பமாக, பிரேம் பிரகாஷ் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் துப்பாக்கியை அங்கு விட்டுச் சென்றதாக ராஞ்சி காவல்துறை தெரிவித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்டதாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.