இந்தியா

சிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை

சிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை

Rasus

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு குறித்த விசாரணைக்காக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் 5 பேர் உள்பட 16 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ப.சிதம்பரத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை தொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேள்விகளுக்கு சிதம்பரம் அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.