இந்தியா

2ஜி - ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

2ஜி - ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

rajakannan

2ஜி அலைக்கற்றை ‌முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி, 2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், சாட்சிகளின் வாய்மொழி வாக்குமூலங்கள்- ஆவணங்கள் இடையே முரண்பாடு உள்ளதாகவும், வாக்குமூலம் அளித்தவர்கள் சாட்சிக் கூண்டில் மாறுபட்ட தகவல்களை தெரிவித்ததாகவும் சைனி குறிப்பிட்டார்.

இதனையடுத்து, 2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு உடனடியான செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகவும் கருத்துக்கள் எழுந்தன. 

இந்நிலையில், 2ஜி வழக்கில் அலக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இதனையடுத்து சிபிஐ தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.