இந்தியா

லாலுவின் பண்ணை வீடு முடக்கம்: அமலாக்கத்துறையினர் நடவடிக்கை

லாலுவின் பண்ணை வீடு முடக்கம்: அமலாக்கத்துறையினர் நடவடிக்கை

rajakannan

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டை, கறுப்பு பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். 

லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது ஐ.ஆர்.டி.சி. ஓட்டல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தை தனது குடும்பத்தினர் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தியது. இதில் டெல்லியில் லாலு மகள் மிசா பாரதிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள பண்ணை வீடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நில ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, லாலுவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய அலாக்கத்துறையினர், லாலுவின் மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த பண்ணை வீட்டை தற்போது முடக்கியுள்ளனர். 

அந்த வீட்டின் சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்றும், ஆனால் அதை ஒரு‌ கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மீதத் தொகையை கறுப்புப் பணமாக பரிமாற்றம் செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.