kavitha, ed twitter
இந்தியா

தெலங்கானா Ex CM மகள் கவிதா கைது.. டெல்லி அழைத்துச் செல்லும் ED!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. தேர்தல் குறித்த அறிவிப்புகள், நாளை இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்முடிவில் ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது நடவடிக்கையை கண்டித்து தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, கவிதா தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருப்பதுடன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக, ED வழியாக தன்னை குறிவைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.