இந்தியா

சாக்‌ஷி மகராஜின் சர்ச்சை பேச்சு...விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

சாக்‌ஷி மகராஜின் சர்ச்சை பேச்சு...விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

webteam

பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜின் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் சாக்‌ஷி மகராஜ் பேசியது குறித்து விளக்கமளிக்குமாறு மீரட் நகர நிர்வாகத்துக்கு அம்மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேசத்துக்கு தேர்தல் தேதியினை அறிவித்த தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட பிரிவினரையோ, மதத்தினருக்கு எதிராகவோ பேசுவது நடத்தை விதிமுறைகளை மீறுவதாகவும் என்று அறிவித்திருந்தது.

மீரட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ், நாட்டில் மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. அதற்கு இந்துக்கள் பொறுப்பல்ல. நான்கு மனைவிகளும், நாற்பது குழந்தைகளையும் பெற்றுக் கொள்பவர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். பெண்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் இயந்திரங்கள் அல்ல. இந்துக்களோ, இஸ்லாமியர்களோ பெண்களை மதிக்க வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.