நிலநடுக்கம் புதிய தலைமுறை
இந்தியா

அந்தமான் ஒட்டிய பகுதிகளில் வாரத்திற்கு 5 முறை நில அதிர்வு ஏற்படுவது வழக்கம் - காரணம் என்ன?

அந்தமான் பகுதியில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அந்தமான் தீவுகளை ஒட்டியுள்ள கடல்பகுதியில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்தமான் தீவுகளின் அருகே உள்ள கேம்ப்பெல் பேயிலிருந்து 487 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தரவுகளை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தமான் ஒட்டிய பகுதிகளில் வாரத்திற்கு 5 முறை நில அதிர்வானது ஏற்படுவது வழக்கம். ஏனென்றால் கண்டத்திட்டு பகுதிகளில் இத்தீவுகள் அமைந்துள்ளதே காரணம். மேலும் ஏற்பட்ட நில அதிர்வின் அளவானது குறைந்த அளவில் இருப்பதால் எந்தவித எச்சரிக்கையும் விடப்படவில்லை.