இந்தியா

இன்று பூமிக்கு அருகில் வரும் சனிக்கோள்: வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

இன்று பூமிக்கு அருகில் வரும் சனிக்கோள்: வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

JustinDurai
இன்று பூமிக்கு அருகில் வரும் சனிக்கோளை தெளிவாகக் காணமுடியும் என கூறுகின்றனர் வானியல் நிபுணர்கள்.
சூரியக் குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் ஒன்றான சனிக்கோள், இன்று பூமிக்கு அருகில் வரவுள்ளது. இந்நிகழ்வின்போது சனிக்கோளை நன்றாக காண முடியும் என்கின்றனர் வானியல் நிபுணர்கள். இன்று காலை 11:30 மணியளவில் சனியும் பூமியும் நெருக்கமாக இருக்கும் என்று ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து பட்நாயக் கூறினார்.
இன்றிரவு எங்கிருந்தாலும் சனிக்கோளை பொதுமக்கள் காணலாம். சாதாரணமாக பைனாகுலர் மூலம் சனிக்கோளின் வளையத்தைக் காணலாம். ஆனால், நவீன தொலைநோக்கி மூலம் பார்த்தால் வளையத்துக்கும் கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூட காண முடியும்.
இந்நிகழ்வை வெறும் கண்களாலும் பார்க்கலாம். வெறும் கண்களால் பார்க்கும்போது சனிக்கோள் விண்மீன் போலத் தெரியும். அதாவது, நன்றாக உற்றுப் பார்த்தால் விண்மீன் போல விட்டுவிட்டு ஒளிராமல் தொடர்ந்து ஒளிர்வதைக் கொண்டு, இதுதான் சனிக்கோள் என உறுதி செய்யலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.