இந்தியா

ரசாயனக் கசிவு பாதித்த மக்களுக்கு ரூ.10,000 நிவாரணம் : ஜெகன்மோகன் ரெட்டி

webteam

விசாகப்பட்டினத்தில் ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பலர் உயிரிழந்தனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சுற்றுவட்டார கிராம மக்கள் 19,983 பேரின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பத்திற்குச் சிறப்பு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அத்துடன் ரசாயனக் கசிவு ஏற்பட்ட தொழிலாளர் சாலையில் பொறுப்பிலிருந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.