இந்தியா

இயற்கை உபாதைக்காக பிஎம்டபிள்யூ காரை நிறுத்திய ஓட்டுநர்: திருடிச் சென்ற மர்மநபர்கள்

இயற்கை உபாதைக்காக பிஎம்டபிள்யூ காரை நிறுத்திய ஓட்டுநர்: திருடிச் சென்ற மர்மநபர்கள்

webteam

இயற்கை உபாதைக்கு செல்வதற்காக சாலை ஓரத்தில் ஓட்டுநர் நிறுத்திய பிஎம்டபிள்யூ காரை மர்மநபர்கள் திருடிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

 நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷாப் அரோரா. இவர் தனது உறவினர் ஒருவரின் பிஎம்டபிள்யூ காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு விருந்து ஒன்றுக்கு சென்ற அவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த ரிஷாப், இயற்கை உபாதைக்காக காரை சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

காரைவிட்டு அவர் இறங்கி சென்றதும் அவர் பின்னால் வந்த மர்மநபர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து
அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக போதையில் கார் ஓட்டி வந்ததற்காக ரிஷாப்புக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

(மாதிரிப்படம்)

 இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், கார் திருட்டு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம். ரிஷாப்புக்கு தெரிந்தவர்கள் இந்த காரை திருடிச்
சென்றிருக்க வாய்ப்புள்ளது. அந்த கார் ரிஷாப்பின் உறவினருடையது. காருக்கு ரூ.40 லட்சம் வங்கிக்கடன் பாக்கியும் உள்ளது. எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என தெரிவித்துள்ளனர்.