பசுவின் கோமியத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநில பாஜக தொண்டர்களிடையே துர்காபூரில் காணொலி காட்சி மூலமாக பேசிய திலீப் கோஷ் "நான் பசுவை பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது. கழுதைகளுக்கு பசுவின் அருமை தெரிய வாய்ப்பில்லை. இது இந்தியா, பசுவை தெய்வமாக வழிப்பட்ட கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம். நாம் ஆரோக்கியமாக வாழ பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும். மது குடிப்பவர்களால் பசுவின் அருமையை தெரிந்துக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும் "பசுவின் கோமியத்தை குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளரும். அதனால் நம்மை கொரோனா வைரஸ் தாக்காது, ஆராக்கியமாக வாழலாம்" என்றார் திலீப் கோஷ். அவரின் இந்தப் பேச்சு அறிவியல்பூர்வமானதல்ல என்று பாஜகவைச் சேர்ந்த சிலரே விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.