மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் திராவிட நாடு கோரும் விவாதமாக இணையதளங்களில் மாறியுள்ளது.
மத்திய அரசு மாட்டிறைட்சிக்கு தடை வித்திட்டுள்ள நிலையில், திராவிட நாடு கோரும் பல்வேறு ஹேஷ்டேக்குகள், டிவிட்டர் சமூக ஊடகத்தில் ட்ரண்டாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட நாடு கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் டிவீட் செய்து வருகின்றனர். கேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழாக்கள் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தவரின் திராவிட நாடு ஹேஷ்டேக்கிற்கு தமிழர்களும், கன்னடர்களும் கருத்துகளை பதிவு செய்து இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கி உள்ளனர். தென் மாநில மக்களின் மொழி, கலாசாரம், உணவுப் பழக்கவழக்கங்களில் மத்திய அரசு தலையிடுவதால், திராவிட நாடு கோரிக்கையை கேரள மக்கள் முன்வைத்துள்ளனர்.