இந்தியா

இஸ்லாமியர்கள் இறால், நண்டுகளை சாப்பிட வேண்டாம்: ஜாமியா நிசாமியா ஆணை

இஸ்லாமியர்கள் இறால், நண்டுகளை சாப்பிட வேண்டாம்: ஜாமியா நிசாமியா ஆணை

webteam

இஸ்லாமியர்கள் இறால், நண்டுகளை சாப்பிட வேண்டாம் என்று பழமையான இஸ்லாமிய அமைப்பான ஜாமியா நிசாமியா ஆணை வெளியிட்டுள்ளது.

ஜாமியா நிசாமியா 1876-ல் நிறுவப்பட்ட இஸ்லாமிய அமைப்பாகும். இந்தியாவில் உள்ள பழமையான இஸ்லாமிய கல்லூரிகளில் ஒன்று. அந்த அமைப்பு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு ஆணையை வெளியிட்டது. அதில் இறால்கள் மற்றும் நண்டுகள் மீன் வகைகளின் கீழ்வரவில்லை எனவே இஸ்லாமியர்கள் அதை சாப்பிட வேண்டாம். 

இந்த ஆணையை ஜாமியா நிசாமியாவின் தலைமை முப்தி முகமது அசீமுதீன் வெளியிட்டுள்ளார். இறால் முதுகெலும்பற்ற விலங்கு, பூச்சி வகையை சேர்ந்தவையாகும். எனவே இது விலக்கபட்ட உணவுகளின் கீழ் வருகிறது. இதுபோன்ற உணவுகள் இஸ்லாமியர்களுக்கு கண்டிப்பாக அருவருப்பானதாக கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.