சமத்துவத்தை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசிலமைப்புச் சட்டம் நீதித்துறைக்கு சில சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதன்படி நீதிபதிகள் இந்த அதிகாரகங்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14ல் இந்தியர்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமானவர்கள் என்னும் பிரிவு உள்ளது. எனவே நீதிபதிகளை வழக்கறிஞர்கள் அழைப்பது குறித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு அறிவுறுத்தலை நோட்டீஸ் மூலமாக விடுத்துள்ளது.
அதில், “அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சமுத்துவத்தை போற்றும் வகையில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இனி நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை ‘மை லார்ட்’ மற்றும் ‘யூவர் லார்ட்சிப்’ என்று அழைக்கவேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.