இந்தியா

தோக்லாம் பகுதியிலிருந்து படை வாபஸ் இல்லை: இந்தியா திட்டவட்டம்

தோக்லாம் பகுதியிலிருந்து படை வாபஸ் இல்லை: இந்தியா திட்டவட்டம்

webteam

தோக்லாம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் இல்லை என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சீனா, பூடான் மற்றும் சிக்கிம் சந்திக்கும் எல்லைப்பகுதி அருகே தோக்லாமில் இருந்து இந்தியப் படைகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என சீனா கூறியிருந்தது.

சீனா வெளியிட்டிருந்து 15 பக்க அறிக்கை ஒன்றில் தோக்லாம் பகுதியில் இந்தியா தனது படைகளை நிறுத்தியிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தது. உடனடியாக படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் கூறியிருந்தது. கடந்த ஜூன் 18ம் தேதியன்று இந்தியப் படைகள் சீனப் பகுதிக்குள் 400 மீட்டர் வரையில் முன்னேறி வந்து விட்டது என்றும் ஜூலை இறுதியில் மேலும் 40 இந்திய படையினர் நுழைந்து விட்டதாகவும் தவிர ஒரு புல்டோசரும் சட்டவிரோதமாக சீன எல்லைக்குள் வந்துள்ளதாகவும் சீனாவின் அறிக்கை கூறியுள்ளது.

இந்நிலையில் தோக்லாம் பகுதியில் இருந்து படைகளைக் குறைப்பதோ அல்லது வாபஸ் பெறும் திட்டமோ இல்லை என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தோக்லாம் பகுதியை சீனா தனது பகுதி எனச் சொல்லி வரும் நிலையில் அது பூட்டானுக்குச் சொந்தம் என இந்தியாவும் பூட்டானும் கூறி வருகின்றன.