இந்தியா

பாஜக ஆதரவு ஸ்டிக்கருடன் திரிந்த நாய் ! பிடித்துச்சென்ற தேர்தல் அதிகாரிகள்

Rasus

வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் பாஜக ஆதரவு ஸ்டிக்கருடன் திரிந்த நாயை அதிகாரிகள் பிடித்துச் சென்றுள்ளனர்.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 கட்ட தேர்தல் நடபெற்று முடிந்துள்ளது. நேற்று தான் 4-ஆம் கட்ட தேர்தல் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது. அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே ஏக்நாத் மோதிரம் சவுத்ரி என்பவர் தனது நாயுடன் சுற்றி திரிந்து அலைந்துள்ளார். அந்த நாயின் உடம்பில் பாஜக ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த நாய் மீதும் அவரது எஜமானர் மீதும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஏக்நாத்தை கைது செய்தனர். அத்துடன் பாஜக ஆதரவு ஸ்டிக்கருடன் திரிந்த நாயையும் அழைத்துச் சென்றனர்.

தேர்தல் நடைபெறும் நாளில் பரப்புரையில் ஈடுபடுவது தவறு. ஆனால் நாயின் மேல் ஒட்டப்படிருந்த ஸ்டிக்கரில் “ மோடிக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்றுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே, தேர்தல் நாளில் பரப்புரையில் ஈடுபட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஏக்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.