கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் இடங்கள் பொதுப்பிரிவுக்கு சென்றுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 15 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வு நடத்தப்பட்டு மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் போது, மண்டல் கமிஷன் உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்படவில்லை” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஒ.பி.சி.பிரிவினருக்கான இடங்கள் பொதுப்பிரிவுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.