இந்தியா

குறையும் சுகப்பிரசவம்: விதிகளை மீறி தனியார் மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சையா?

குறையும் சுகப்பிரசவம்: விதிகளை மீறி தனியார் மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சையா?

Sinekadhara

2018லிருந்து இதுவரை இந்தியாவில் கிராமப் புறங்களில் 18.6 மில்லியன் குழந்தைகளும், நகர் புறங்களில் 7.4 மில்லியன் குழந்தைகளும் பிறந்துள்ளன.
என்.எஸ்.ஓ அறிக்கைப் படி, இந்தியாவில் 21.3% கிராமப்பகுதிகளிலும், 47.8% நகர்புறங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்துள்ளன. இதன்படி மொத்தம் 75 லட்சம் குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவிக்கப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் 55 %குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அரசு விதிப்படி 17% தான் அறுவைசிகிச்சை செய்யவேண்டும். அதாவது, தனியார் மருத்துவமனைகளில் 38% அரசு நியமித்த அளவைவிட அதிகமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டுள்ளது

சுக பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்புக்கு ஆகும் செலவை அளவை என்.எஸ்.ஓ. நியமித்துள்ளது. அதன்படி கிராமப்புறங்களில் ஒரு அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு ரூ. 16,475, நகர்புறங்களில் ரூ.19,548 ஆக நிர்ணயித்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக ஆகும் செலவை 18 ஆயிரமாக எடுத்துக்கொண்டு, 28.5 லட்சம் குழந்தை பிறப்புக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டால் தனியார் மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ரூ. 5,130 கோடி வருமானம் இதுவரை வந்துள்ளது.