சித்தராமையா PT DESK
இந்தியா

டெல்லி புறப்பட்டார் சித்தராமையா... கர்நாடக முதல்வராக 80 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்களா?

நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

PT WEB

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கு 80 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால் இன்று டெல்லி சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே சிவகுமார் இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

சித்தராமையா

இதனால் 4 மேலிட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 136 சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அறிக்கை இன்று தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே-விடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் 80 சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இருவரும் இன்று டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்த சூழலில் டி.கே சிவகுமார் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதும், சித்தராமையா மட்டும் தனி விமான மூலமாக இன்று நண்பகல் 1 மணிக்கு மேல் டெல்லி புறப்பட்டுள்ளார்

D K Sivakumar

டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக இன்று மாலை கர்நாடகா முதலமைச்சர் பெயரை தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.