இந்தியா

7 மணி நேர போராட்டம்: மண்டையில் இருந்து 2 கிலோ கட்டியை நீக்கிய ’திறமை’ டாக்டர்கள்!

7 மணி நேர போராட்டம்: மண்டையில் இருந்து 2 கிலோ கட்டியை நீக்கிய ’திறமை’ டாக்டர்கள்!

webteam

மண்டையில் இருந்த 1.8 கிலோ கட்டியை, சுமார் 7 மணி நேரம் போராடி டாக்டர்கள் நீக்கியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் சந்த்லால் பால். வயது 31. துணி வியாபாரியான இவருக்கு தலையில் பிரச்னை. மண்டையின் மீது இன்னொரு மண்டை இருந்தது. நடந்தால் ’தலைக்கனமாக’ இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். இந்நிலையில் அது பெரிய தொந்தரவாக இருக்க, மருத்துவமனையில் காண்பித்தார். பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம் என்றனர். அதற்காக மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையை பரிந்துரை செய்தனர். 

பிப்ரவரி மாதம் மும்பை வந்த பால், மருத்துவமனையில் சேர்ந்தார். பத்து நாட்களாக அவரை பரிசோதித்து தலையில் இருந்த கட்டியை ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர் மருத்துவர்கள். பின்னர் ஏழு மணி நேரம் போராடி மருத்துவர் ரமேஷ் பர்மல் தலைமையிலான மருத்துவர் குழு, அந்தக் கட்டியை நீக்கியுள்ளது.

இதுபற்றி மருத்துவர் ரமேஷ் பர்மல் கூறும்போது, ‘இது வித்தியாசமான கேஸ். ரொம்ப கடினமான ஆபரேஷன். சவாலான ஒன்று. நவீன முறையில் சிகிச்சை அளித்து கட்டியை கஷ்டப்பட்டு நீக்கியுள்ளோம். மருத்துவத்துறையில் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு ஆபரேஷன் இது’ என்றார்.