உத்தரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

இப்படியும் நடக்குமா? வயிற்றில் இருந்த கருப்பை; குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற ஆணுக்கு அதிர்ச்சி!

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்ற ஆண் ஒருவருக்கு, வயிற்றுப்பகுதியில் கருப்பப்பை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வருபவர் 46 வயதான ராஜ்கிரி மிஸ்திரி. இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளன. ராஜ்கிரிக்கு கடந்த சில நாட்களாகவே, தொடர் வயிற்று வலி இருந்துள்ளது.

ஒரு நாள் கடுமையான வயிற்று வலி ஏற்படவே, வயிற்று வலிக்கு என்ன காரணம் என்று அறிந்துள்ள வேண்டுமென்ற முனைப்போடு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன்பிறகு, இவரது அடிவயிற்றில் சதைத்துண்டு ஒன்று உள் உறுப்புகளுடன் ஒட்டிக்கொண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, இவருக்கு குடலிறக்கம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நோயறிதலுக்கான இலவச ஹெர்னியா பரிசோதனை முகாமிற்கு சென்று பரிசோதனை சென்றுள்ளார்.

அப்போது, இவரை சோதித்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் நரேந்திர தேவ், “ அல்ட்ராசவுட் பரிசோதனையின் மூலம் இவருக்கு ஹெர்னியா இருப்பது தெளிவாக தெரிகிறது.” என்று தெரிவித்துள்ளார். ஆகவே, தனக்கு ஹெர்னியாதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ராஜ்கிரி. எனவே, இவருக்கு ஹெர்னியாவிற்குரிய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு விரைந்துள்ளது.

அப்போதும் இவரது வயிற்றின் அடிப்படையில் ஒரு சதைப்பகுதி காணப்பட்டுள்ளது. அப்போதுதான் தெரிந்தது, வளர்சியடையாத கருப்பை ஒன்று அவரின் உள்ளுறுப்புகளுடன் ஒட்டிய நிலையில் இருந்துள்ளது என்று. மேலும், முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப்பையுடன் கரு முட்டையை உருவாகும் ovary இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக அதை வெளியே எடுத்துள்ளனர்.

இதை குறித்து தெரிவித்த மருத்துவர் தேவ், இது மிஸ்திரியின் உடலில் ஏற்பட்ட ஒரு குறைபாடு என்றும், இவருக்கு பெண்களை போன்ற வேறு எந்த அம்சங்கள் இல்லை... எனவே, தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்விகளுக்கு ஏற்றவாறு இதுப்போன்ற தினம் ஒரு செய்தி நடந்தேறி வியப்பில் ஆழ்த்தி வருகிறது.