இந்தியா

பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிப்பு -மருத்துவர் சங்க கூட்டமைப்பு முடிவு

பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிப்பு -மருத்துவர் சங்க கூட்டமைப்பு முடிவு

JustinDurai

பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல்  என்று கருத்து தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ சங்க அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பாபா ராம்தேவ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். 

எனினும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு, ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவை கண்டித்து இன்று (ஜூன் 1) கருப்பு தினம் அனுசரிக்க மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (FORDA INDIA) முடிவு செய்துள்ளது. கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டாலும் இன்றைய தினத்தில் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை நடைபெறும் என்று மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.