இந்தியா

தடைகளைத் தாண்டி டாக்டர் ஆனார், ஹாதியா

webteam

மதம் மாறி திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஹாதியா, கேரளாவில் ஹோமியோபதி கிளினிக்கை நேற்று தொடங்கியுள்ளார். 

கேரள மாநிலத்தை சேர்ந்த அகிலா, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத் தைச் சேர்ந்த ஷபின் ஜஹானை, மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்டார். தனது பெயரையும் ஹாதியா என்று மாற் றிக் கொண்டார். இந்நிலையில் தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோருக்குச் சாதகமான தீர்ப்பு வெளியானது.

பின்னர் ஹாதியாவின் கணவர் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங் கு ஆஜரான ஹாதியா, சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே மதம் மாறியதாகத் தெரிவித்தார். 

இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வந்தது. நாடு முழுவதும் கவனிக்கப்பட்ட வழக்காகவும் மாறியது. இறுதியில் ஹாதியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், தடைகளை தாண்டி ஹோமியோபதி படிப்பை முடித்தார் ஹாதியா. இதற்கிடை யே மலப்புரத்தில் உள்ள ஒத்துகுங்கல் என்ற ஊரில் நேற்று கிளினிக் தொடங்கியுள்ளார். இதில் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஹாதியாவின் உறவினர்கள் கலந்துகொண்டனர். இத்தகவலை ஜஹான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.