இந்தியா

’யாரும் பிறப்பிலேயே ஜீனியஸ் கிடையாது’ இந்திய கணிதவியலாளர் பானு பிரகாஷ்

’யாரும் பிறப்பிலேயே ஜீனியஸ் கிடையாது’ இந்திய கணிதவியலாளர் பானு பிரகாஷ்

EllusamyKarthik

‘யாரும் பிறக்கும் போதே ஜீனியஸாக பிறப்பது இல்லை. அப்படி சொல்வதை நம்பவும் வேண்டாம்’ என தெரிவித்துள்ளார் சமீபத்தில் லண்டனில் நடந்த மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் நடைபெற்ற மனக் கணக்கீட்டு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியரான நீலகண்ட பானு பிரகாஷ்.

"மனக் கணக்கீடு சமீபத்தில் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் பிரபலமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் இதை நீண்ட காலமாக செய்து வருகிறேன்.

இந்த நிகழ்வில் எந்தவொரு இந்தியரும் இதுவரை தங்கம் வென்றதில்லை. நான் வென்றது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம் அது.

யாரும் பிறக்கும் போதே ஜீனியஸாக பிறப்பது இல்லை. அப்படி சொல்வதை நம்பவும் வேண்டாம்.

கணிதம் ஒரு கடல் போன்றது. முதல் அலை தாக்கும் போது நீங்கள் பயப்படுவீர்கள். ஆனால் நீங்கள் சிறிது நேரத்தில் அதன்  சூத்திரத்தை கண்டறிந்துவிட்டால் அது அமைதியானதாகிவிடும்.

மன கணக்கீட்டு திறன்கள் மனித மூளையின் திறனைப் பற்றி அறிய மக்களை ஊக்குவிக்கும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.