இந்தியா

முன்னாள் மேயர் கொலைச்சம்பவம்: பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி 

முன்னாள் மேயர் கொலைச்சம்பவம்: பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி 

webteam

நெல்லை முன்னாள் மேயர் கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியுடன், அவர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாளும் படுகொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்னரே கணவரைப் பறிகொடுத்த மாரியம்மாள், தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலைக்குச் சென்று வந்தார். மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரையே நம்பி வாழ்ந்து வந்த அவரின் மூன்று பெண் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். 

மாரியம்மாள் குடும்பத்தினருக்கும், அவரின் 3 பெண் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் அரசு உதவ வேண்டுமென்று அப்பகுதி மக்களும் உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் திமுகவைச் சேர்ந்தவர். நேற்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.