மனமொத்து விவாகரத்து செய்யும் வழக்கில் 6 மாதங்கள் காத்திருக்கு வேண்டுமென்ற விதியை நீதிமன்றங்கள் தளர்த்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவகாரத்து வழக்கு குறித்து நீதிமன்றங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், சில விதிகளை தளர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இரு தரப்பிலும் மனமொத்து விவாகரத்து கோருவோர் குறைந்தபட்சம் 6 மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற விதி இனி கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது. இரு தரப்பிலும் விவாகரத்து கோரி மனு செய்பவர்கள், ஒரு வாரத்துக்குப் பிறகு 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டதை தள்ளுபடி செய்யவும் தனியே மனு செய்யலாம் என்றும், அதனை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் விவாகரத்து கோரும் இருவரும் சேர்ந்த வாழ விரும்பாத நிலையிலும், மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் நீதிமன்றமே 6 மாத கால காத்திருப்பு விதியை ரத்து செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.