இந்தியா

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்

jagadeesh

கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா தனிப்பட்ட முடிவு இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார். அத்துடன் இவர்கள் அனைவரும் கர்நாடகா சட்டப்பேரவையின் நடப்பு காலம் முடியும் வரை இவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிப்பையும் விடுத்தார்.

இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்  இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் உச்சசநீதிமன்றம் தெரிவித்துள்ளது.