இந்தியா

இந்தியாவிலும் இருந்தது டைனோசர் - புதிய ஆதாரம் வெளியானது: எங்கே தெரியுமா?

இந்தியாவிலும் இருந்தது டைனோசர் - புதிய ஆதாரம் வெளியானது: எங்கே தெரியுமா?

ச. முத்துகிருஷ்ணன்

டைனோசர் குறித்த ஆராய்ச்சி செய்திகள் வெளிநாடுகளில் அடிக்கடி வெளியாவது வழக்கம் என்ற நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் டைனோசர் முட்டையின் பகுதிகள் கிடைத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக் என்ற இடத்தில் டைனோசர் முட்டை ஓடுகள் கிடைத்ததாக டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. இது டைனோசர் வாழ்வியல் குறித்த படிம வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆமை, பல்லி, முதலை மற்றும் பறவைகள் போன்ற இனப்பெருக்க முறையை டைனோசர்கொண்டிருந்ததா என்ற ஆராய்ச்சியில் இந்த டைனோசர் முட்டை ஓடுகள் உதவும் என்றும் கூறியுள்ளனர்.