இந்தியா

'3 லட்சம் பொது சேவை மையங்களில் வேலைவாய்ப்பு' - பிரதமர் மோடி

'3 லட்சம் பொது சேவை மையங்களில் வேலைவாய்ப்பு' - பிரதமர் மோடி

webteam

நாட்டில் மூன்று லட்சம் பொது சேவை மையங்களின் வாயிலாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலத்தில் இயங்கிவரும் டிஜிட்டல்‌ இந்தியா பயனாளிகளிடம் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசினார். டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பம் கிராமப் புறங்களில் வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்தல், கட்டணத்துக்கான பில்லையும் ஆன்லைனில் பெறுதல் போன்ற சேவைகளை டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பம் மூலம் பெற முடிவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்ப சேவைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் மூன்று லட்சம் பொது சேவை மையங்கள் இயங்கி வருவதாக தெரிவித்தார். முதியவர்கள் பென்ஷன் தொடர்பான சேவையை பெற அவர்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.