இந்தியா

மத்திய பட்ஜெட்: ஆர்.பி.ஐ சார்பில் இந்தியாவில் விரைவில் அமலுக்கு வருகிறது டிஜிட்டல் கரன்சி

மத்திய பட்ஜெட்: ஆர்.பி.ஐ சார்பில் இந்தியாவில் விரைவில் அமலுக்கு வருகிறது டிஜிட்டல் கரன்சி

நிவேதா ஜெகராஜா

நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

டிஜிட்டல் கரன்சியை, ஆர்.பி.ஐ. அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்த அவர், 2023-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு உதவ, ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவையன்றி அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடவும் 35.4% அதிகம். இந்த அறிவிப்புகளுடன், பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.