இந்தியா

ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

JananiGovindhan

பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் சமூகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் குழந்தைகள் வளர்ப்பதில் தாய் தந்தை என இருவரது பங்கும் பொறுப்பும் இருத்தல் வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதனை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன் என்ற புது வசதியை விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

அதன் மூலம் தாய்மார்கள் மட்டுமல்லாமல் தற்போது தந்தைகளும் குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடும் வகையில் பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தை சுகாதா என்ற பெண் தனது ட்விட்டரில் பகிர்ந்து, “இது கட்டாயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. குழந்தை வளர்ப்பு பெண்களுக்கான பொறுப்பு மட்டுமல்ல” எனக் குறிப்பிட்டு பெங்களூரு விமான நிலைய நிர்வாகத்தின் முன்னெடுப்பை பாராட்டியுள்ளார்.

அவரது ட்வீட் வைரலானதோடு, பலரும் அதனை வரவேற்று, இது போன்ற டையப்பர் ஸ்டேஷன் வைப்பதை இயல்பாக்க வேண்டும் எனவும், இது முற்போக்கான முன்னெடுப்பு எனவும் இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ: