சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் வெள்ளம் அலைமோதுகிறது. கடந்த 34 நாட்களில் 22 லட்சத்து 66 ஆயிரத்து 128 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நடை திறக்கப்பட்டது முதல் நேற்று (20.12.22) வரையிலான 34 நாட்களில் 25 லட்சத்து 2 ஆயிரத்து 253 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்று வரை 22 லட்சத்து 66 ஆயிரத்து 128 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் செவ்வாய்கிழமையான நேற்று (20.11.22) 89,933 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 83,687 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினசரி சராசரியாக 80 ஆயிரம் கடந்த பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.